Saturday, May 13, 2017

Unapproved Plots/Layouts sale/resale, registration

அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை புதிய அரசாணைகளை பின்பற்றி பத்திரப் பதிவுகளை செய்யலாம் என தடையை தளர்த்தியது சென்னை உயர் நீதிமன்றம்


அங்கீகார மற்ற வீட்டு மனைகளை வரையறை செய்வது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள 2 அரசாணைகளைப் பின்பற்றியும், பத்திரப் பதிவு சட்டம் பிரிவு 22 ஏ-வில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தங்களைப் பின்பற்றியும் பத்திரப்பதிவு செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தடையை தளர்த்தி உள்ளது.

ஆனால், புதிய அரசாணையில் உள்ள ‘‘20.10.16-க்கு முன்பாக பதியப்பட்ட அல்லது விற்கப்பட்ட அங்கீகாரமற்ற மனையிடங்களுக்கு தமிழ்நாடு நகரமைப்புச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப் படுகிறது’’ என்பதை ஏற்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

ஏனெனில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தடை விதிக்கப் பட்டபோது வரையறை செய்வதற்கு எந்தவொரு விதிகளும் உருவாக்கப்படவில்லை. ஆனால் தற்போது புதிய விதிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது.

மேலும் தற்போது பத்திரப் பதிவுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த அனுமதி மேற்படி நிலுவை வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்கிற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கெனவே பத்திரப் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்ட 9.9.2016-ம் தேதியில் இருந்து அந்த தடை உத்தரவு தளர்த்தப் பட்ட 28.03.17-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 9 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பத்திரப் பதிவுகள் சட்டவிரோதமாக நடந்துள்ளன. அவை செல்லாது. உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மேற்கொள்ளப்பட்ட அந்த பத்திரப் பதிவுகள் குறித்து தமிழக அரசு முறையாக விசாரித்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதுபோல ஏப்ரல் 21-ம் தேதியில் இருந்து மே 12-ம் தேதி வரை ஏதேனும் பத்திரப் பதிவுகள் நடந்து இருந்தால் அவையும் சட்ட விரோதமானது’’ எனக்கூறி வழக்கு விசாரணையை வரும் ஜூன் 14-ம் 2017 தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.


இவன்

லோ. செந்தில்குமார்
வழக்கறிஞர்
சென்னை
கைபேசி. 9787365846

No comments:

Post a Comment